இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றை ஈரான் தாக்கியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள பீர்செபாவில் சொரோகா மருத்துவமனை மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிற்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சேதங்கள் காயங்கள் குறித்து மதிப்பிடுகின்றோம் நோயாளிகளை மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசர சேவை பிரிவான மகென் டேவிட் அடொம் தெரிவித்துள்ளது.
80வயது பெண்ணொருவரும் 70 வயது ஆணும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவசரசேவை 30பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு கட்டிடம் காணப்பட்ட பகுதியில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதை பார்த்தேன் 60 வயது பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என துணை மருத்துவபணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM