bestweb

உலகளாவிய இறுதி ஒப்புதலை பெற்ற சவூதி ; எக்ஸ்போ 2030க்கு பூரண தயார்!

Published By: Digital Desk 2

19 Jun, 2025 | 12:22 PM
image

உலக எக்ஸ்போ 2030 கண்காட்சியினை சவூதி அரேபியா நடாத்துவதானது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சிகள் பணிகத்தின் (BIE) பொது சபை கூட்டத்தின் போது, சவூதியின் பதிவு ஆவணத்தை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு இந்த முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது எக்ஸ்போ 2030 இன் அடுத்த கட்ட ஆயத்தப் பணிகளின் ஆரம்பத்திற்கான துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

2030ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2031 மார்ச் 31 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, 6 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட மிகப் பெரிய வளாகத்தில் நடத்தப்பட உள்ளதோடு இது 40 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் 195 நாடுகளுக்கும் அதிகமான பங்கேற்புகளை ஈர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற மேற்குறிப்பிட்ட நிகழ்வின்போது, உலக எக்ஸ்போ கொடியை சம்பிரதாய பூர்வமாக சவூதி அரேபியக் குழுவிற்கு BIE கையளித்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு, மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும், சவுதி அரேபியாவின் விரிவான விஷன் 2030 வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டும் உலகத் தரம் வாயந்த ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதாக சவூதி தரப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ரியாத் நகரத்தின் அரச குழுமத்தின் செயலாளராக செயல்படும் தலைமை செயல் அதிகாரி எஞ்சினியர் இப்ராஹிம் அல்-சுல்தான் கருத்து தெரிவிக்கையில்,

சவூதி அரேபியா தனது பதிவு ஆவணத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு மிகவும் முன்னதாகவே சமர்ப்பித்து சாதனை படைத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றது. இது சாதாரணமாக எடுக்கும் நேரத்தின் பாதிக்குக் குறைவான நேரமாகும். இது நாட்டின் திறமையையும் உலகளாவிய உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. இந்த முக்கியமான சாதனைக்குத் அந்நாட்டுத் தலைமை வழங்கிய உறுதியான ஆதரவுக்காக அவர் நன்றியை தெரிவித்ததுடன் அது இச்சாதனைக்கு முக்கிய காரணியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இப்போது அதிகாரப்பூர்வ ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, சவூதி அரேபியா சர்வதேச நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கும் பணிகளை ராஜதந்திர வழிகள் மூலம் ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம், இதுவரை நடத்தப்பட்ட உலகக் கண்காட்சிகளிலிருந்து மிகவும் வேறுபட்ட, பெருந்திட்டங்களை கொண்ட நிகழ்வாக அமைவதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

சர்வதேச வணிக உலகம் எக்ஸ்போ 2030-ஐ எதிர் பார்த்திருக்கும் இந் நிலையில், ரியாத் நவீன முயற்சி, கூட்டாண்மை மற்றும் நிலைத்த வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான உலக அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் ; சாம்பல்...

2025-07-08 15:24:25
news-image

காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய...

2025-07-08 15:16:39
news-image

காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு...

2025-07-08 11:11:47
news-image

ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை...

2025-07-08 10:24:49
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட...

2025-07-07 20:54:56
news-image

1,580 நில அதிர்வுகள் ; ஜப்பான்...

2025-07-07 17:10:21
news-image

மஸ்க்கின் புதிய அரசியல் கட்சி -...

2025-07-07 14:41:13
news-image

வீட்டில் வளர்த்த சிங்கம் சீறிப் பாய்ந்தது...

2025-07-07 14:39:20
news-image

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு...

2025-07-07 11:03:35
news-image

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு...

2025-07-07 10:26:54
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தவர்களின்...

2025-07-07 13:44:16
news-image

பாக்கிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து...

2025-07-07 08:57:31