மன்னார் , மருதமடு திருப்பதியில் நடைபெற ஆடி மாத திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 400 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்னாயத்துக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (18) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
திருவிழா வரும் ஜூன் 23ஆம் திகதி மாலை கொடியேற்ற விழாவுடன் ஆரம்பமாகி, ஜூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறும் திருப்பலியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த விழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில், அவர்களது நலன் கருதி சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 01ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வேஸ்பர் ஆராதனை மற்றும் ஜூலை 02ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM