(நெவில் அன்தனி)
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ், மழையினால் ஆட்டம் இரண்டரை மணி நேர ம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பின்னர் மீண்டும் தொடர்ந்தபோது 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இலங்கையிடம் தாரைவார்த்தது.
தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களில் இருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 458 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் 9 விக்கெட்களை இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்த மொத்த எண்ணிக்கையில் மத்திய வரிசை வீரர்களான நஜ்முஸ் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய மூவரும் 411 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிய போதிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா நால்வரையே மீண்டும் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபடுத்தியது பெரும் ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது.
எவ்வாறாயினும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இலங்கை 6 விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷை ஓரளவு கட்டுப்படுத்தியது.
தனது இன்னிங்ஸை 136 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
279 பந்துகளை எதிர்கொண்ட ஷன்டோ 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 148 ஓட்டங்களைப் பெற்றார்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷன்டோ 4ஆவது விக்கெட்டில் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குருடன் 264 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அவர் ஆட்டம் இழந்த பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் இலங்கை பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்டு 114 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 423 ஓட்டங்களாக உயர்த்தியபோது கடும் மழை பெய்ததால் பிற்பகல் 1.40 மணி அளவில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இரண்டரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் பிற்பகல் 4.15 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
மொத்த எண்ணிக்கை 458 ஓட்டங்களாக இருந்தபோது முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுததாடிய முஷ்பிக்குர் ரஹிம் 350 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 163 ஓட்டங்களைப் பெற்றார்.
சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 123 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இந்த இருவரின் விக்கெட்களுடன் மேலும் 4 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் அணியினர் பெரும்பாலும் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு நாளைக் காலை இலங்கைக்கு துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுப்பர் என கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM