bestweb

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட “Hari Pirisidu Railway” திட்டம்

18 Jun, 2025 | 05:29 PM
image

Darley Butler & Company நிறுவனமானது, இலங்கை ரயில்வே மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையுடன் இணைந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையின் கீழ் (Bio Clean) ““Bio Clean Hari Pirisidu Railway”” என்ற சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையை (CSR) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்து பராமரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற துப்புரவு பொருட்களை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கவுள்ளது.  

இதனை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, 2025 ஏப்ரல் 30ஆம் திகதியன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கோட்டை ரயில் நிலைய அதிபர் எஸ்.எம்.எல்.சிறிவர்தன, இலங்கை ரயில்வேயின் விற்பனை முகாமையாளர் சந்தன, மேலதிக பொதுமுகாமையாளர் டி.எஸ்.பொல்வத்த, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் பணிப்பாளருமான (சுற்றுச்சூழல் மேம்பாடு) ஷியாமணி பெரியப்பெரும மற்றும் Darley Butler & Companyயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சஞ்சீவ குணவர்தன மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தமது ஒத்துழைப்பினை அடையாளப்படுத்தும் வகையில், தமது அனுசரணைப் பொருட்களை  எஸ்.எம்.எல்.சிறிவர்தனவிடம் Darley Butler நிறுவனம் கையளித்தது.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த Darley Butler & Companyஇன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சஞ்ஜீவ குணவர்தன, “ஒரு நிறுவனமாக, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத துப்புரவு பொருட்களை தயாரிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ரயில் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான மலசலகூட வசதிகளை வழங்குவதே இந்த முயற்சியின் குறிக்கோளாகும்.

இது மிகவும் சிறந்த மற்றும் சௌகரியமான பயண அனுபவத்திற்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகின்றோம். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து, இனிவரும் வருடங்களில் இச்செயற்பாட்டினை  விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இதற்கு மேலதிகமாக, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் பணிப்பாளருமான (சுற்றுச்சூழல் மேம்பாடு) ஷியாமணி பெரியப்பெரும, இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, அதன் பெறுமதியையும் வலியுறுத்தினார்.

பொதுச் சுகாதாரத்திற்கு உதவுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் ரயில் பயணிகளின் வசதியையும்  சுகாதாரத்தையும் மேம்படுத்துவதில் இந்த திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும் என அவர் கூறினார்.

Darley Butler நிறுவனத்தின் இந்த சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையை பாராட்டி, இலங்கை ரயில்வேயின் மேலதிக பொதுச்செயலாளர்  டி.எஸ்.பொல்வத்தவும் இந்நிகழ்வில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

Darley Butler நிறுவனமானது, இந்த திட்டத்தின் ஊடாக பயணிகளுக்கு தூய்மையானதும் சௌகரியமானதுமான பயணத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே சந்தர்ப்பத்தில், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் பங்களிக்கின்றது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்தி பொது மலசலகூடங்களின் சுகாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்தவும், அதனூடாக பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் தமது பங்களிப்பினை வழங்க எதிர்பார்க்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்