இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் ஒரு சில பகுதிகளில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மண்சரிவு, மரங்கள் விழுதல், கட்டிடங்கள் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கண்ணமலை செல்லானம் பகுதியில் பலத்த மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கண்ணமாலையில் மட்டும் சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. சில வீடுகள் தரைமட்டமாக இடிந்து விழுந்தன.
வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. பலர் உறவினர் வீடுகளுக்கும், வாடகை வீடுகளுக்கும் சென்றுள்ளனர். வயதானவர்கள், நோயாளிகள் வீடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.
"பல வருடங்களாக கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய தடுப்புச் சுவர் கட்டுவதற்காக பல முறை கோரிக்கை விடுத்தும் கேரள அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை" என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொடர் ஆபத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM