பெரும்பான்மையானவர்கள் வாடகை வீட்டிலும், சிலர் சொந்த வீட்டிலும் வசிப்பர். வலிமையான ஜாதகம்- ஏராளமான திறமை - அற்புதமான வாய்ப்பு என அனைத்தும் இருந்தாலும்வாழ்க்கையில் முன்னேற இயலாத சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும்.
இதற்கான பின்னணியை ஆராய்ந்தோம் என்றால் வாஸ்து குறைபாடு. அதாவது நீங்கள் இருக்கும் வீடு எதிர்மறை ஆற்றலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என பொருள்.
உடனே இதனை அகற்றுவதற்கான உபாயம் என்ன? என்று கேட்பர். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக பரிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் இருக்கும் மனைகள் சைவ மனைகள் என்றும், தெற்கு, மேற்கு , தென்மேற்கு ஆகிய திசைகளில் உள்ள மனைகள் அசைவ மனைகள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சைவ மனைகளின் திசையில் வீடு உள்ளவர்கள் உயிர்ப்பலி தரக்கூடாது. அதையும் மீறி கொடுத்தால் அதுவே தோஷம் ஆகிவிடும். அசைவ மனைகளில் குடிபுகுவோர்கள் ரத்த பலியை கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் இதுவும் தோஷத்தை கொடுக்கும்.
சைவ மனைகள் உள்ளவர்களின் வீடு ஏதாவது வாஸ்து குறைபாடுடன் இருந்தால்.. வெண் பூசணிக்காய் ஒன்றை வாங்கி, அதனை எட்டு துண்டுகளாக வெட்டி, அதன் மீது மஞ்சள் குங்குமத்தை தடவி, உங்களது வீட்டின் எட்டு திசைகளிலும் வைத்து விடுங்கள்.
ஒரு லக்ன தருணம் எனப்படும் இரண்டு மணி தியாலம் கழித்து பார்த்தால் .. உங்களுடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அந்த பூசணி கீற்றுகள் உறிஞ்சி விடும்.
அதன் பிறகு அதனை எடுத்துக் கொண்டு ஓடும் நீரில் விட்டு விடவேண்டும் அல்லது ஒதுக்குப்புறத்தில் உள்ள வெட்டவெளியில் குழி தோண்டி புதைத்து விட வேண்டும்.
அதே தருணத்தில் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்ட பூசணிக்காயை எந்த மரத்தின் நிழலிலோ அல்லது சாக்கடைகளிலோ அல்லது முச்சந்திகளிலோ போடக்கூடாது என்பதை மனதில் உறுதியாக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM