இவ் வருடம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாக டொனால்ட் ட்ரம்ப் பதிவியேற்றுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் செயலி தடைக்கான காலவகாசத்தை நீடிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் குறைந்தது செப்டெம்பர் மாதம் வரை டிக்டொக் செயலியின் காலவகாசம் நீடிக்கப்படும்.
2024 தேர்தலில் இளம் வாக்காளர்களுக்கு இந்த செயலி உதவியமையால் ஜூன் மாதம் 19 ஆம் திகதி நிறைவடைய இருந்த காலவகாசத்தை நீடிப்பதால் மே மாதம் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
டிக்டொக் செயலியை தொடர்ந்து செயல்படுத்த வைப்பதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக்கை சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் ஜனவரி மாதத்திற்குள் அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய மறுத்ததால் தடை செய்யப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கரோலின் லீவிட் மேலும் தெரிவித்துள்ளதாவது,
டிக்டொக் 90 நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் தங்கள் தரவு பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் என்ற உறுதியுடன் டிக்டொக் செயலியை தொடர்ந்து பயன்படுத்தபடுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
"நாங்கள் சீனாவின் அனுமதி பெறே வேண்டி இருக்கும்". "நாங்கள் அதைப் பெறுவோம் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி ஜி இறுதியில் அதை அங்கீகரிப்பார் என்று நினைக்கிறேன்." என ட்ரம்ப் தெரிவித்துள்ளாரர்.
காலவகாசத்தை நீடிக்க சட்டப்பூர்வ அடிப்படை உள்ளதா என்று கேட்டபோது, அதற்கு ஆம் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
டிக்டொக் செயலிக்கு தடை நீடிப்பானது காங்கிரஸின் விருப்பத்திற்கு ட்ரம்பில் இந்த தீர்மானம் முரணானது. ஏனெனில் டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றியது. அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உடனடியாக மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கினார்.
170 மில்லியன் அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக்டொக்கை சீனா உளவு பார்ப்பதற்கும் அரசியல் கையாளுதலுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்ற கவலைகளை நிவர்த்தி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM