bestweb

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்

18 Jun, 2025 | 04:32 PM
image

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலையின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (18) வருகை தந்தனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக குறித்த பாடசாலைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பின்னர் அதன் வரலாறு குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக செயல்படுத்தப்படும் Clean Sri Lanka திட்டம், நிறைவேற்று அதிகாரத்தின் பணிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் இந்த பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என்.குமாரசிங்க, சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை  எடுத்துக்காட்டும் வகையில், பாடசாலைக்கு பெறுமதியான மரக்கன்று ஒன்றையும்  வழங்கிவைத்தார்.

முப்படை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கேணல் தனஞ்சய செனரத், நிட்டம்புவ சங்கபோதி தேசிய பாடசாலை அதிபர் என்.ஏ.எல். விஜேரத்ன மற்றும் ஆசிரியர்கள் குழு உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47