ஈரான் மக்கள் வட்ஸ்அப்பினை தங்கள் கையடக்கதொலைபேசிகளில் இருந்து அகற்றவேண்டும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட்ஸ்அப் டெலிகிராம் உட்பட பயனாளர்கள் உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய செயலிகளை நீக்குமாறு ஈரான் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செயலிகளே இஸ்ரேலியர்கள் ஆட்களை இனம் கண்டு இலக்குவைப்பதற்கு உதவியாக உள்ளன என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அதிகாரிகளின் இந்த எச்சரிக்கை குறித்து கரிசனை வெளியிட்டுள்ள மெட்டா ஈரான்மக்கள் தங்கள் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
மக்களிற்கு மிகவும் அவசியமான தருணத்தில் எங்கள் செயலிகள் முடக்கப்படுகின்றன என்பது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் வட்ஸ்அப்பில் நீங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பும் அனைத்து செய்திகளும் முழுமையாக குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன அதாவது அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாருக்கும் அந்த செய்திகளை அணுக முடியாது வட்ஸ்அப் கூட இல்லை" என்று வட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் சிபிஎஸ் செய்திக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.
"உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிப்பதில்லை அனைவரும் யார் செய்தி அனுப்புகிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருப்பதில்லை மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிப்பதில்லை" என்று வட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் மொத்தமாக தகவல்களை வழங்குவதில்லை. ஒரு தசாப்தத்திற்கும் மேலாகஇ வாட்ஸ்அப் தகவல் கோரப்படும்போது வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளை உள்ளடக்கிய நிலையான வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை மெட்டா வழங்கி வருகிறது.என்று வட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM