bestweb

'மெட்ராஸ் மேட்னி' படத்திற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் - காளி வெங்கட்

18 Jun, 2025 | 04:18 PM
image

'திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்படும் 'மெட்ராஸ் மேட்னி ' திரைப்படத்திற்கு தொடர்ந்து பட மாளிகைக்கு வருகை தந்து, பார்த்து ரசித்து, ஆதரவு தாருங்கள் '  என அப்படத்தின் நாயகனான காளி வெங்கட் கேட்டுக் கொண்டுள்ளார்.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் கடந்த மே மாதம் 29 ஆம் திகதியன்று வெளியானது.

நடுத்தர வர்க்கத்து மக்களின் நாளாந்த வாழ்வியலை உணர்வு பூர்வமான படைப்பாக விவரித்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ''  இப்படத்தின் கதையைக் கேட்டு நடிக்கும்போது .. அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 

 ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார்.

 ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு இதுவரை ஆதரவு அளித்ததற்கு நன்றி தொடர்ந்து ஆதரவை தாருங்கள் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்