தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா - NARA) சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கே.ஏ.டபிள்யூ. ஷியாமலி வீரசேகர, கடந்த மே 25ஆம் திகதி கடலில் மூழ்கிய MSC ELSA-3 கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் துகள்கள் (நர்டில்ஸ்) காரணமாக இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்பு குறித்து நாரா நிறுவனம் மேற்கொண்டுள்ள விரிவான ஆய்வு பற்றி விளக்கமளித்தார்.
ஜூன் 11 முதல் நாரா குழுவினர் வடக்கு (மன்னார், யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நாகதீபம்), வடமேற்கு (புத்தளம் - நுரைச்சோலை, சிலாபம், உடப்புவ, முத்துப்பந்திய) மற்றும் தெற்கு (காலி-தொட்டந்துவ) கடலோரப் பகுதிகளை கண்காணித்து, சுற்றுச்சூழல் மாசுபாடு, இரசாயன பாதிப்புகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.
இதுவரை கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் வீரசேகர தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM