4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் கைது

18 Jun, 2025 | 03:32 PM
image

4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா - எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கர்ப்பிணித் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கர்ப்பிணித் தாயொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

காயமடைந்த மகள் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கர்ப்பிணித் தாய், தனது கணவருடன் இணைந்து நீண்ட நாட்களாக தனது 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றம்...

2026-07-18 05:41:32
news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04