bestweb

அறிவியல் சார்ந்த குற்ற புலனாய்வு வகைமையில் தயாராகும் 'கைமேரா '

18 Jun, 2025 | 03:49 PM
image

அறிமுக நடிகர் LNT எத்தீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கைமேரா ' எனும் திரைப்படம்-  சயின்ஸ் வித் கிரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லர் ஜேனரில் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மாணிக் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் ' கைமேரா ' எனும் திரைப்படத்தில் LNT எத்தீஷ் , தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் , மாணிக் ஜெய்,  சௌமியா,  கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் வித் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ''மனித உடலுக்குள் மிருகங்களின் உயிரணுக்கள் செலுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்தும்,  மனிதனின் குணம் மிருகத்தின் குணமாக மாறினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கைமேரா என்பது மராத்திய மொழி சொல். இதனை தமிழில் 'மரபணு மாற்றம்' என குறிப்பிடலாம்'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் வெளியாகும் என்றும், விரைவில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்