(நெவில் அன்தனி)
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் நிறுவனங்களில் ஒன்றான கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் க்ளப்பின் (கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்) உத்தியோகபூர்வ அனுசரணையாளராக லங்கா ஐஓசி பிறைவேட் லிமிட்டெட் கம்பெனி கைகோர்த்துள்ளது.
இது கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினது மட்டுமல்லாமல் இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டை பலப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாகவும் அமைகிறது.
இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் அதிசிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு இருக்கிறது.
1873இல் ஸ்தாபிக்கப்பட்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பல தலைமுறைகளாக தேசிய அளவிலான கிரிக்கெட் திறமைகளை வளர்ப்பதில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இக் கழகத்திற்காக விளையாடிய பல முன்னாள் வீரர்கள் இலங்கை அணிகளில் இடம்பெற்றதை மறக்க முடியாது.
டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் ரஞ்சித் சமரசேகர, அபு புவார்ட், ராஜரட்னம் சகோதரர்களான ரசல் மற்றும் ட்ரவோ, அசித்த ஜயவீர, வெண்டல் கெலார்ட், வாஸ் குணவர்தன, சுனில் பெர்னாண்டோ ஆகியோர் உட்பட இன்னும் பலர் இலங்கைக்காக (அப்போது சிலோன் என அழைக்கப்பட்டது) ஏதாவது ஒரு மட்டத்தில் விளையாடியுள்ளனர்.
டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் றோய் டயஸ், கய் டி அல்விஸ், சமிந்த வாஸ், ரொமேஷ் களுவித்தாரன, சமகால வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், அக்கில தனஞ்சய, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, தனஞ்சய லக்ஷான் பொன்ற சிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமை கோல்ட்ஸ் கழகத்திற்கு இருக்கிறது.
இலங்கையின் மிகவும் நம்பகமான வர்த்தக நாமமாக கடந்த 19 வருடங்களாக சேர்வோ மசகு எண்ணெய் இருந்து வருகிறது. மேலும் இந்த பங்காளித்துவமானது செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தின் பலம் மிக்க ஐக்கியத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஐஓசியின் அனுசரணை தொடர்பாக கருத்து வெளியிட்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத் தலைவர் நிஷான்த ரணதுங்க,
'எங்கள் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்ததற்காக லங்கா ஐஓசிக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோல்ட்ஸ் குடும்பத்தில் லங்கா ஐஓசியை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். திறமையான வீரர்களை வளர்த்து, மைதானத்தில் மட்டுமல்லாமல் விளையாட்டின் அதிசிறந்த தூதுவர்களாக வளர்ப்பதில் நாங்கள் கொண்டுள்ள அதே அக்கறையை ஐஓசியும் கொண்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக அவர்களது அர்ப்பணிப்புடனான நீண்டகால பணியை பாராட்டுகிறோம்' என்றார்.
இதேவேளை, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துடன் இணைவதில் பெருமை அடைவதாக லங்கா ஐஓசி பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் தீபக் தாஸ் தெரிவித்தார்.
'இது பெரு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்படும் வெறும் அனுசரணை மாத்திரம் அல்ல. இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும், உற்சாகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஓர் அர்த்தமுள்ள, ஆர்வமுள்ள முதலீடாகும்' என்றார் அவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM