நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் பொறுப்பு நிறைந்த விருந்தோம்பலுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள Radisson Hotel கண்டி உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகின்றது
கண்டி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஹோட்டல் நிலைத்தன்மை அடிப்படைகளுக்கான தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றது.
ஹோட்டல் நிலைத்தன்மை அடிப்படைகள் என்பது யாதெனில் உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) ஊடாக உருவாக்கப்பட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பாகும். வள செயற்திறன், சுற்றுச் சூழல் தொடர்பாக வெளிப்படுத்தும் அக்கறை, உள்நாட்டு சமூக ஈடுபாட்டை வெளிப்படுத்துதல் உட்பட 12 அத்தியாவசிய அளவுகோல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
“கண்டி ரெடிசன் ஹோட்டலில், நிலைத்தன்மை சரிபார்ப்பு என்பது வழமையான சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கான பட்டியலை விட தரமானதாக காணப்படுகின்றது. இது நாம் தினமும் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே உள்ளது.
அத்துடன் கழிவுகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். பசுமை நடைமுறைகளைத் எட்டுவதற்கும், இலங்கையில் விருந்தோம்பலை நிலையாக ஏற்படுத்தி அதனை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகின்றோம்” என ரெடிசன் கண்டி ஹோட்டல் முகாமையாளர் மங்கள ஹேமானந்த தெரிவிக்கின்றார்.
இந்த முன்முயற்சியின் கீழ் ஹோட்டலின் தொடர்ச்சியான அங்கீகாரம், விருந்தினர்களுக்கு நிலையான தங்குமிடங்களை உருவாக்குவதிலும், நேர்மறையான தாக்கத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்ற ரெடிசன் ஹோட்டல் குழுமமானது, உலகளாவிய நிலைத்தன்மை உத்திகளை பொறுப்பான வியாபாரங்களுடன் இணைத்து முன்னெடுக்கின்றது.
La Vie Hotels & Resorts ஆல் நிர்வகிக்கப்படும் ரெடிசன் கண்டி ஹோட்டலின் அர்ப்பணிப்பானது உலகளாவிய தரநிலைகள் மற்றும் பிராந்திய பொறுப்பு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது, இது இலங்கையில் சுற்றுச்சூழல் உணர்வு கொண்ட விருந்தோம்பல் பண்பின் அதன் பங்கை வலுப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.
கண்டியிலுள்ள ரெடிசன் ஹோட்டலின் முக்கிய நிலைத்தன்மை நடவடிக்கைகளில் பின்வருவன அடங்குகின்றன. அதாவது ஹோட்டல் செயல்பாடுகளில் ஆற்றல் நுகர்வு, தண்ணீரின் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள், வள செயல்திறனில் வலுவான கவனம் செலுத்துதல் போன்றன உள்ளடங்குகின்றன.
மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை நீக்குவது தொடர்பாக அதிக கவனமும் செலுத்தப்படுகின்றது. இது சுற்றாடல் பாதிப்பை குறைப்பதற்கான ஹோட்டலின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. லினன் மறுபயன்பாட்டுத் திட்டம் மற்றும் பச்சை - சான்றளிக்கப்பட்ட துப்புரவுப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட நிலையான வீட்டு பராமரிப்பு நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
இவை எமது விருந்தினர்களுக்கு பாதுகாப்பானதும் சுற்றாடல் நேயம் சார்ந்ததுமான உணர்வையும் உறுதி செய்கின்றன. அனைத்து சாப்பாட்டு மெனுக்களில் பல்வேறு சைவ உணவு விருப்பத் தேர்வுகள் உள்ளன. அத்துடன் ஆரோக்கியமான உணவு தேர்வுகளும் உள்ளடங்குகின்றன. உள்நாட்டு சமூகத்தின் பொறுப்பு கூறும் வகையில் அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
Radisson Hotel கொழும்பு, கண்டி மற்றும் Radisson Blu Resort காலி ஆகியவற்றின் கிளஸ்டர் பொது முகாமையாளர் கிறிஸ்டோபர் குவாட்ரோஸ் கருத்து தெரிவிக்கையில்,
“எமக்கு கிடைத்துள்ள இந்த சாதனையானது இலங்கையிலுள்ள எமது மூன்று ஹோட்டல்களும் வெளிக்காட்டிய அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவே உள்ளது. எமது மூன்று ஹோட்டல்களும் நிலைத்தன்மை சான்றிதழ்கள் பெற்றவை என்பதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இது பொறுப்பு நிறைந்த எதிர்காலத்தை மையமாகக் கொண்ட விருந்தோம்பல் சார்ந்த எமது தொடர்ச்சியான அர்ப்பணிக்கான சான்றாகும். நிலைத்தன்மை என்பது ஒரு சாதாரண பயணம் அல்ல. ஒன்றிணைந்து கடைசி வரை பயணிக்க வேண்டிய ஒன்றாகவே நாம் அதனை காண்கின்றோம்” என குறிப்பிட்டார்.
“சுற்றுச்சூழல் தினத்தன்று எமக்கு கிடைத்த அங்கீகாரம் எம்மை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இலங்கையிலுள்ள மூன்று ரெடிசன் ஹோட்டல்களிலும் எமது முயற்சிகள் உலகளாவிய மற்றும் எமது உள்நாட்டு சமூகத்தினர் மத்தியில் மாற்றத்தை உருவாக்குகின்றன என்பதை கூறலாம். ரெடிசன் கண்டி ஹோட்டல் மீண்டும் சான்றிதழை பெற்றதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். நிலையான விருந்தோம்பலில் அவர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு, நிலைத்தன்மை மற்றும் தலைமைத்துவம் மூலம் மீண்டும் ஒரு வலுவான முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM