இரு வெவ்வேறு பகுதிகளில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

18 Jun, 2025 | 12:33 PM
image

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதம்பிட்டி மற்றும்  ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லஹேன  ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் யட்டியந்தோட்டை மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 31 வயதுடையவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 6,800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் மற்றும்  ராகமை ஆகிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் மற்றும்  ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிகுடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 16:12:31
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26
news-image

மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில்...

2026-01-20 14:44:16
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-01-20 14:39:45