bestweb

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின் 650வது அடுக்குமனையை கையளிக்கும் நிகழ்வு

18 Jun, 2025 | 12:42 PM
image

நகர்ப்புற குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தில் சாதனையை நிலைநாட்டும் வகையில், John Keells Properties - TRI-ZEN தனது 650வது அடுக்குமனை குடியிருப்பை கையளிப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இது கொழும்பின் வளர்ந்து வரும் ஆதன நிர்மாணத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது.

85% அடுக்குமனைகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், இந்த சாதனையானது செயற்திட்டத்தின் மீது சந்தை கொண்டுள்ள வலுவான நம்பிக்கையையும், நகரின் மையப்பகுதியில் திறன் முறை, சிறந்த அமைவிடம் மற்றும் சிக்கனமான விலையில் வாழ்விடங்களுக்கான வளர்ந்து வரும் தேவையையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள வலுவான வளாகத்தில் அமைந்துள்ள TRI-ZEN, கொழும்புப் பகுதியில் உள்ள மிகப்பெரிய தனித்த குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமாகும். மூன்று வானளாவிய கோபுரங்களில், திறன்மிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட 897 அடுக்குமனை குடியிருப்புகளை அது கொண்டுள்ளது.

இலங்கையில் ஒரு தனியார் நிர்மாணிப்பாளரால் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள மிகவும் பாரிய, வானளாவிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான TRI-ZEN, அபிலாஷை நிறைந்த மற்றும் அனைத்து வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கை முறையை வழங்குகிறது.

தற்போது சொற்ப எண்ணிக்கையிலான அடுக்குமனைகள் மட்டுமே எஞ்சியுள்ளதால், மிகவும் சிக்கனமான விலையில் செழிப்பான குடியிருப்பு சமூகத்தின் அங்கமாக மாறும் ஒரு தனித்துவமான வாய்ப்பை கொள்வனவாளர்கள் கொண்டுள்ளனர். இங்கு திறன் வாழ்க்கையும், ஒப்பற்ற சௌகரியமும் சங்கமிக்கின்றன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்