கனரக வாகனம் மீது லொறி மோதி விபத்து ; ஒருவர் படுகாயம் ; மது போதையில் இருந்த சாரதி கைது

18 Jun, 2025 | 11:38 AM
image

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனம் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்,  லொறியின் உதவியாளர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.  

குடாகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனம் மீது மோதியுள்ளதோடு, லொறியை செலுத்திய சாரதி மது போதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில்  பொருத்தப்பட்டிருந்த  சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதோடு, சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17