உலக தட­கள சம்­பி­யன்ஷிப் தொடரில் பங்­கு­பற்­று­வ­தற்கு இலங்­கையின் ஓட்ட வீராங்­கனை நிமாலி தகு­தி­பெற்­றுள்ளார்.லண்­டனில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 13ஆம் திக­தி­வரை உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்கு இணை­யாகக் கரு­தப்­படும் இந்தத் தொடரில் உலகின் முதல்­நிலை வீர, வீராங்­க­னை­களே கலந்­து­கொள்வர்.

குறிப்­பாக இம்­முறை ஜமைக்­காவின் உசைன் போல்ட் இந்தத் தொட­ருடன் விளை­யாட்டுப் போட்­டி­க­ளி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார்.

அதனால் உலக தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் இம்­முறை விசேட இடத்தைப் பெறுகின்றன. இந்­நி­லை­யில் இந்தப் போட்டித் தொடரில் பங்­கேற்­ப­தற்கு இலங்கை வீராங்­கனை நிமாலி தகு­தி­பெற்­றுள்ளார்.

கடந்த வாரத்தில் இந்­தி­யாவின் புனேஷ்­வரில் நடை­பெற்று முடிந்த ஆசிய தட­கள சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் நிமாலி தங்கம் வென்­றி­ருந்தார். இதன் மூலம் உலக தடகள சம்பியன்ஷிப் தொடருக்கு அவர் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.