bestweb

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு மேலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை

Published By: Vishnu

18 Jun, 2025 | 03:37 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாத்தறை வெலிகம W 15 ஹோட்டல் துப்பாக்கி பிரயோகம் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உபுல் எனும் அதிகாரியின் குடும்பத்தாருக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தில் இருந்து 15 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 25 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடாக அப்போதைய  ஜனாதிபதியிடம் இந்த நிதி பெறுகைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக 27 ஆம் இலக்க சாட்சியாளராக  பதில்  பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரிய குழுவில் சாட்சியமளித்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்காக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து, விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி சூரசேன தலைமையிலான சிறப்புக் குழு நேற்று  பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

நீதியரசர் (ஓய்வுநிலை) என்.பி.இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க,சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ், சொலிசிட்டர் ஜெனரால் ரஜித பெரேரா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது  குழுவின் முன்னிலையில் 27 ஆம் இலக்க சாட்சியாளரான பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விடயங்களை வருமாறு முன்வைத்தார்,

2023.12.31 ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து சென்ற குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள்  வெலிகம பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தமது ஆடையாளத்தை உறுதிப்படுத்தியிருந்தால் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் நிகழ்ந்திருக்காது.இவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லவே முயற்சித்துள்ளார்கள்.

துப்பாக்கி பிரயோகம் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உபுல் எனும் அதிகாரியின் குடும்பத்தாருக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தில் இருந்து 15 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 25 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன  

இதற்கு மேலதிகமாக உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் உபுல் என்பவரின் பதவி நிலையை தரமுயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் விசேட விசாரணை அலகில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் பதவி தரமுயர்த்தல் தொடர்பான பரிந்துரை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

மாத்தறை வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கி பிரயோகம் சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோனிடம் இரண்டு முறை கோரியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் முதல் தடவையாக 4 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதே அறிக்கை ஓரிரு மாதங்களின் பின்னர் திகதி மாத்திரம் மாற்றப்பட்டு இரண்டாவது தடவையாக  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2023.12.31 ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து சென்ற குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள்  வெலிகம பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தமது ஆடையாளத்தை உறுதிப்படுத்தியிருந்தால் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் நிகழ்ந்திருக்காது.இவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லவே முயற்சித்துள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கு விசேட அதிரடி படையின் 28 உத்தியோகத்தர்கள், மேல்மாகாண புலனாய்வு பிரிவின் 09 உத்தியோகத்தர்கள், விசேட பாதுகாப்பு பிரிவின் 09 அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கடமையின் நிமித்தம் 43 பேர் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் 2025.பெப்ரவரி மாதம் இறுதிபகுதியில்  உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவாகியிருந்தார்.இதனால் அந்த 43 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் சேவையில் இருந்து மீளழைத்துக்கொண்டேன். அவர்களை பிறிதொரு பாதுகாப்பு கடமைகளில் அமர்த்த ஆலோசனை வழங்கினேன்.

தேசபந்து தென்னக்கோன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தும் தனிப்பட்ட இல்லத்தில் இருந்தும் வெளியேறி தலைமறைவாயிகிருந்த பின்னர் அவரை  கைது செய்வதற்கு மாத்தறை நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்தது.அதனைத் தொடர்ந்து ஹோக்கந்தர பகுதியில் உள்ள அவரது வீட்டை பரிசோதனை செய்த போது அங்கு சலவை இயந்திரத்தில் துணி ஒன்றில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.அது தற்போது வழக்குப் பொருளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் அவருக்கு சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் முதலாவதாக வினவினேன்.அப்போது  இவ்விடயம் குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தினார்.தேசபந்து தென்னக்கோனுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏதும் கிடையாது என்று கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கினார்.

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அவருக்கான சம்பளம் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னரே சம்பளம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது என சாட்சியமளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32