bestweb

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சாணக்கியன்

Published By: Vishnu

18 Jun, 2025 | 03:22 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாமல் ராஜபக்சவுடன் நீலப் படையணியுடன் இணைந்து செயல்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கும் துணை போனவர் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு  பதிலளித்த சாணக்கியன், இது போன்ற தான்தோன்றித்தனமான பேச்சுக்களால் தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள்,  வெட்கம் என்பதொன்று இருந்தால் களுவாஞ்சிகுடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க பிள்ளையானுடன் பேசுவீர்களா என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற விளையாட்டில் ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின்  கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய  வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,

 சில முறைகேடுகள் தொடர்பில் சாணக்கியன் எம். பி  சபையில் கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் அந்த சம்பவங்கள் இடம்பெறும் காலங்களில் அவர் நாமல் ராஜபக்சவுடனேயே இருந்தார்.நாமல் ராபக்ஸவின்   நீலப் படையணியுடன் அவர் இருந்தார்.அந்த வகையில் அக்காலத்தில் இடம்பெற்ற அனைத்து  ஊழல் மோசடிகளுக்கும் இவர் துணை போயிருந்தார்.அவ்வாறு இருந்தவர் தற்போது எமது அரசாங்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது பொருத்தமற்றது என்றார்.

இதற்கு பதிலளித்த சாணக்கியன் எம்.பி. நான் சபையில் உரையாற்றியபோது எந்தவொரு முறைகேடுகள் தொடர்பிலும் எதனையும் குறிப்பிடவில்லை. கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் தொடர்பிலேயே  கருத்துக்களை முன்வைத்தேன்.

முதலில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தான்தோன்றித்தனத்தால் தான் உள்ளுராட்சிமன்றத்  தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள். நாங்கள் கொள்கையுடன் செயற்படுகிறோம். களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு உங்களின் கட்சி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் உங்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32