(செ.சுபதர்ஷனி)
பொலிஸாரின் தடை உத்தரவை மீறி முன்னோக்கிச் சென்ற காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 4 கிலோ போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடலோர பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (16) இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹெட்டியாவத்தை சந்திக்கருகில் அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும் பொலிஸாரின் தடை உத்தரவை மீறி கார் முன்னோக்கிப் பயணத்தை அடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் காரை பின்தொடந்து சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான காரை புறக்கோட்டை ரெக்லமேஷன் வீதி, கடலோர வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரி மறித்து, வாகனத்தை சோதனையிட்டுள்ளார். இதன்போது வானத்திலிருந்து இறங்கிய கார் சாரதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குறித்த காரில் நான்கு பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 கிலோ 112 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தப்பியோடிய சந்தேகநபர் தொடர்பில் கடலோர பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM