bestweb

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயமாகும் -  பிரதமர்

Published By: Vishnu

18 Jun, 2025 | 02:48 AM
image

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சரியான கருத்து என்றும் அதேநேரத்தில் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்துகிறார்.

ஜூன் 17ஆம் திகதி கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் "இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்" என்ற தலைப்பின் கீழ் உலக வங்கி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுகையில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

சிறுவர் பராமரிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகமாக நாட்டின் பொருளாதாரத்துடன் இணைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி அவர்களுக்கு தொழிலாளர் படையில் உயர்ந்த முன்னேற்றம் கிடைக்கும் வழியை திறப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இங்கு மேலும் கருத்துக்களை தெரிவிக்கையில் பிரதமர் வலியுறுத்தியது, சம்பளம் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் தனது உழைப்பை வழங்கும் பெண் பொருளாதாரத்தின் மையமான காரணியாகும். ஆனால், சமூக ரீதியாக அவருக்கு உள்ள பல்வேறு தடைகளை எதிர்கொண்டு பெண்களுக்கு தொழிலாளர் படையுடன் இணைவதற்கு உள்ள வாய்ப்பு பெரிதும் வரையறுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32