(நெவில் அன்தனி)
இலங்கை காலப்ந்தாட்ட சம்மேளனத்தின் பூரண அனுமதியுடன் கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்டப் போட்டிகள் முடிவில் ஏ குழுவில் நியூ ஸ்டார் கழகமும் பி குழுவில் ஜாவா லேன் கழகமும் தலா 3 புள்ளிகளுடன் ன்னிலையில் இருக்கின்றன.
ஏ குழுவில் நியூ ஸ்டார் கழகமும் சோண்டர்ஸ் கழகமும் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் வெற்றிபெற்று தலா 3 புள்ளிகளை ஈட்டியள்ளன.
ஆனால், 2 நிகர கோல்கள் வித்தியாசத்துடன் நியூ ஸ்டார் முதலாம் இடத்திலும் ஒரு நிகர கோல் வித்தியாசத்துடன் சோண்டர்ஸ் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை (15) நடைபெற்ற ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை எதிர்த்தாடிய நியூ ஸ்டார் கழகம் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிறந்த வியூகங்கள், நேர்த்தியான பந்து பரிமாற்றம், வீரர்களிடையே சிறந்த புரிந்துணவர்வு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருங்கே வெளிப்படுத்தி நியூ ஸ்டார் வெற்றிபெற்றது.
நியூ ஸ்டார் சார்பாக மொஹமத் அவ்லால் (9ஆவது நிமிடம்), மொஹமத் சாஹி (64ஆவது நிமிடம்) ஆகியோர் அற்புதமான கோல்களைப் போட்டனர்.
இக் குழுவில் இடம்பெறும் சோண்டர்ஸ் கழகமும் மாளிகாவத்தை யூத் கழகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடின.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடிய அப் போட்டியில் கடைசிக் கட்டத்தில் சோண்டர்ஸ் கழகம் கோல் போட்டு 1 - 0 என இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இரண்டு அணியினரும் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.
எவ்வாறாயினும் போட்டியின் 79ஆவது நிமிடத்தில் ஏ. அஸீஸ் போட்ட கோல் சொண்டர்ஸ் கழகத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
பி குழுவில் ஜாவா லேன் முன்னிலை
பி குழுவில் இடம்பெறும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் கழகமும் தலா ஒரு வெற்றியை ஈட்டி 3 புள்ளிகளைப் பெற்று நிகர கோல் வித்தியாச அடிப்படையில் சம நிலையில் இருக்கின்றன.
ஆனால், இரண்டு அணிகளும் போட்ட கோல்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜாவா லேன் முதலாம் இடத்தில் இருக்கிறது.
மொரகஸ்முல்லை கழகத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஜாவா லேன் கழகம் 4 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஜாவா லேன் சார்பாக எம். ஏ. அக்ரம் (22 நி.), அணித் தலைவர் மாலக்க பெரேரா (26 நி., 69 நி., 77 நி.) ஆகியோரும் மொரகஸ்முல்லை சார்பாக டி. ரி. டி சில்வா (15 நி., 45 + 2 நி.), டி. மதுஷன்க (90 + 4 நி.) ஆகியோரும் கோல்களைப் போட்டனர்.
றினோனை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெட் ஸ்டார்
பி குழுவில் பலம் வாய்ந்த றினோன் கழகத்தை எதிர்த்தாடிய பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாக விளையாடி 2 - 1 என்ற கோலகள் வித்தியாசத்தில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
போட்டி ஆரம்பித்து முதல் 20 நிமிடங்களில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.
போட்டியின் 28ஆவது நிமிடத்தில் என். சி. ரஹ்மான் மின்னல் வேகத்தில் செயல்பட்டு 'ரிபவுண்ட்' பந்தை பலமாக உதைத்து ரெட் ஸ்டாரின் முதல் கோலை போட்டார்.
அதன் பின்னர் றினோன் கழக வீரர்கள் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தனர். ஆனால் ரெட் ஸ்டார் பின்கள வீரர்கள் அவற்றை முறியடித்த வண்ணம் இருந்தனர்.
போட்டியின் 68ஆவது நிமிடத்தில் எம். ஆர். எம். ரபாக் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு றினோன் கழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
எவ்வாறாயினும் போட்டியின் 83ஆவது எம்.எவ்.எம். ஆக்கிப் கோல் போட்டு றினோனுக்கு ஆறுதல் கொடுத்தார்.
ஆனால், ரெட் ஸ்டார் 2 - 1 என வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
வீரர்கள், அதிகாரிகள், இரசிகர்கள் மகிழ்ச்சி
மூன்று வருடங்களின் பின்னர் பிரபல கழகங்களுக்கு இடையில் கால்பந்தாட்டப் போட்டி நடைபெறுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாக வீரர்கள், பயிற்றுநர்கள், இரசிகர்கள் தெரிவித்தனர்.
இப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களின் சிறந்த ஆற்றல்களை நோக்கும் போது இலங்கையில் கால்பந்தாட்டம் மங்கிவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
photo challengers
மேலும், ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டியை ஏற்பாடு செய்த செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம். ஐ. அன்தனி மணிவண்ணனின் முயற்சி பாராட்டத்தக்கது என பயிற்றுநர்களும் அணிகளின் உரிமையாளர்களும் தெரிவித்தனர்.
இப் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் அவர்கள் நன்றிகூறத் தவறவில்லை.
இத்தகைய போட்டிகளை நடத்த ஏனையவர்களும் முன்வந்தூல் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என அவர் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM