ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்வோல்க்கெர் டேர்க் தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி மனித புதைகுழிபோன்றவற்றையும் ஜேவிபி கிளர்ச்சி காலத்தைய மனித புதைகுழிகளையும் பார்வையிடவேண்டும் என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளுங்கள்,இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட சர்வதேசத்தவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலிற்கு சென்று யுத்தத்தின் இறுதி அட்டுழியங்களை பார்வையிடவேண்டும் அதன் மூலம் அரசாங்கம் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்ற செய்தியை பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவேண்டும் எனஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்,என பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் எனவும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான இலங்கையின் ஓரளவு புதிய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் புதிய வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சிறிதளவு கூட வெளிப்படுத்தவில்லை என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு அவரது இலங்கை விஜயம் குறித்து எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.
முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே இதுவரை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் பின்பற்றி வருவதாக சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகள்தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM