(நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி அத்தியாயத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் 14 ஓட்டங்களுடனும் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களுடனும் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர்.
17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த ஷன்டோவும் ரஹிமும் மிகவும் பொறுப்புணர்வுடன் சுமார் 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை பெரும் சொதனைக்குள்ளாக்கினர்.
அவர்கள் இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 247 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர்.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 260 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் அடங்கலாக 136 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 186 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
தனது 36ஆவது டெஸ்டில் விளையாடும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் தனது 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 38 வயதான மூத்த வீரர் முஷ்பிக்குர் ரஹிம் 12ஆவது சதத்தைப் பெற்றார்.
விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினார்.
இலங்கை அணியில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவும் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர்.
தரிந்து ரத்நாயக்க ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வீசிய 27 ஓவர்களில் 105 ஓட்டங்களைக் கொடுத்த அவரால் மேலதிக விக்டெகட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது. (124 - 2 விக்)
தனது முதல் 15.5 ஓவர்களை வலதுகையால் பந்துவீசிய தரிந்து ரத்நாயக்க 16ஆவது ஓவரில் இடது கையால் பந்துவீச ஆரம்பித்தார். ஆனால் அவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியாமல் போனது.
அசித்த பெர்னர்ணடோ 51 ஓட்டங்களுடக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் மிலன் ரட்நாயக்க கட்டுப்பாட்டுடன் 12 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவிச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 28 ஒவர்களில் 85 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.
பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டம் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM