(எம்.மனோசித்ரா)
வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கமைய சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு உத்தேசத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் 2025.07.01 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் திறக்கப்படுகின்ற நிலையான வைப்புக்களுக்கு குறித்த உத்தேசத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
நிலையான வைப்புக் காலம் 12 மாதங்கள் (ஓராண்டு) ஆவதுடன், உயர்ந்தபட்ச வைப்புப் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவாகும்.
சராசரி நிறையிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்த வட்டி வீதம் 3 சதவீதத்தை சேர்த்துக் கிடைக்கின்ற பெறுமதி அல்லது குறித்த வங்கியால் வெளியிடப்படும் நிலையான வைப்பு வட்டி வீதத்துடன் 3 சதவீதத்தை சேர்த்துக் கிடைக்கின்ற பெறுமதி அல்லது இரண்டில் அதிகமுள்ள வட்டி வீதத்தை செலுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த நிகழ்ச்சித்திட்டத்திற்னு வட்டிச் சலுகையைச் செலுத்துவதற்காக 30 பில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM