bestweb

உங்க பிறந்த நாளுக்கு இப்படி கோப்பி கேக் செய்து பாருங்க

17 Jun, 2025 | 05:27 PM
image

கோப்பி கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள் :

  • வோல் நட்ஸ் - 1 கப் நறுக்கியது 
  • மைதா மாவு - 2 கப்
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி 
  • பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி 
  • உப்பு - 1/4 தேக்கரண்டி 
  • உப்பில்லாத வெண்ணெய் - 3/4 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • முட்டை - 3 
  • வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி 
  • கோப்பி தூள் - 1 1/2 தேக்கரண்டி 
  • சூடு தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
  • காய்ச்சி ஆறவைத்த பால்
  • கோப்பி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங் 
  • ஐசிங் சுகர் - 250 கிராம் 
  • உப்பில்லாத வெண்ணெய் - 145 கிராம் 
  • ஸ்ட்ராங் காபி டிகாஷன் - 1 தேக்கரண்டி
  • பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் சல்லடையை வைத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும்.

2. மற்றோரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும். அடுத்து சர்க்கரையை சேர்த்து பீட் செய்யவும்.

3. அடுத்து மூன்று முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும்.

4. பின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். பிறகு கோப்பி தூள் , காய்ச்சி ஆறவைத்த பால், மைதா மாவு கலவை ஆகியவற்றை சிறிது சிறிதாக மூன்று முறை சேர்த்து பீட் செய்யவும்.

5. அடுத்து நறுக்கிய வோல் நட்ஸ்களை கேக் கலவையுடன் சேர்த்து கலந்து கேக் டின்னில் ஊற்றவும்.

6. Oven’னை 180°C முன் கூட்டியே சூடாக்கவும். பின்பு 180°C அளவில் கேக்கை பேக் செய்யவும்.

7. பிறகு கேக்கை வெளியில் எடுத்து ஆறவிடவும்.

கோப்பி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங் செய்ய

8. ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், கோப்பி தூள் சேர்த்து பீட் செய்யவும்.

9. அடுத்து பிரெஷ் கிரீம் சேர்த்து மீண்டும் பீட் செய்யவும்.

10. கேக்கை ஒரு தட்டில் வைத்து கோப்பி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங்கை பரப்பவும். மற்றோரு கேக்கையும் வைத்து கோப்பி பட்டர்கிரீம் ப்ராஸ்டிங்கை மேலேயும் ஓரங்களிலும் பரப்பவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right