(எம்.மனோசித்ரா)
நாட்டில் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் 3 பிரதான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே அவற்றுக்கு முன்னுரிமையளித்து அதன் பின்னரே மாகாணசபைத் தேர்தல் குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அராசங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. சுமார் 8 மாத காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்பன நடத்தப்பட்டுள்ளன. தற்போது மக்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய செயற்பட வேண்டும்.
நவம்பரில் வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இவ்வனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு தான் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான காலம் தீர்மானிக்கப்படும். அதற்கு முன்னர் இதனுடன் தொடர்புடைய சட்ட திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM