'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை சம்யுக்தாவும் இணைந்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை சம்யுக்தா தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் என்பதும், அவர் தற்போது ராகவா லோரன்ஸ் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகும் 'பென்ஸ் ' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM