இன்றைய சூழலில் எம்மில் அனைவருக்கும் காலையில் கண் விழித்ததும் தன வரவு குறித்த சிந்தனை தான் முதலில் தோன்றும். அதன் பிறகு தான் கடன்காரர்களின் தொல்லை, நெருக்கடி, அழுத்தம், எந்த ரூபத்தில் இருக்கும் என்ற அவதானம் உண்டாகும். இத்தகைய தருணங்களில் எல்லாம் தன வரவை எப்படி அதிகரித்துக் கொள்ளலாம் என்பதில்தான் எல்லோருடைய சிந்தனையும் இருக்கும்.
இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு வகையினதான பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். இதனை நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக செய்து வரும் போது செல்வ வளம் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
ரத்தின கர்ப்ப கணபதி எனும் விநாயகரின் புகைப்படத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை உங்களுடைய பூஜை அறையிலும், பணப் பெட்டியிலும் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு முறையாக வழிபாட்டை செய்து வந்தால் தன வரவும் மேம்படும்.
மாணிக்க கல் பதித்த வங்கி மோதிரம் எனும் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட மோதிரத்தை அணிந்தாலும் தன வரவு அதிகரிக்கும்.
கல் உப்பு ,மஞ்சள் ,வெல்லம் ,துவரை, பால், இனிப்பு, வெற்றிலை பாக்கு ஐந்து ரூபாய் நாணயம் (14 வாரங்கள்) ஆகியவற்றையும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரை தருணங்களில் வாங்கலாம். இதனாலும் எம்முடைய தன வரவு அதிகரிக்கும்.
வளர்பிறை திருதியை திதி நாளில் ஒரு நபருக்காவது குடிநீருடன் அன்னதானம் வழங்குங்கள். இது உங்களுடைய செல்வ வளத்தை உறுதியாக மேம்படுத்தும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM