சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிஸ்னி மற்றும் பிக்ஸார் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் புதிய விசுவல் எபெக்ட் திரைப்படமான 'எலியோ' எனும் திரைப்படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்கிரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி , ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவு படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த நிறுவனங்கள் தற்போது விண்வெளிக்கு அப்பால் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் புதிய அனுபவத்தை வழங்குகிறது.
விண்வெளி பற்றிய ஆசையுடன் வாழும் சிறுவன் எலியோ - எதிர்பாராத விதமாக அண்டங்கள் முழுவதும் பயணம் செய்யும் பூமியின் தூதராக செயல்படுவதற்கு பரிசீலனை செய்யப்படுகிறான். வித்தியாசமான கிரகங்கள் - வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. எலியோ தான் யார்? என்பதை உணர்வது தான் படத்தின் மையம்.
இதனை மடலின் ஷரஃபியன்- டோமீ ஷீ- ஏட்ரியன் மோலினா ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் எதிர்வரும் இருபதாம் திகதி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிஸ்னி நிறுவனத்தின் ரசிகர்கள் என்பதும், அவர்களின் பிரமிக்கத்தக்க கிறாபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கி இருக்கும் திரைப்படத்தை ரசிக்க உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM