நடிகர் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் படப்பிடிப்பு தமிழகத்தின் பாரம்பரிய நகரமான காரைக்குடியில் நடைபெற்றது.
மலையாள இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் & மணீஷ் கே. தோப்பில் ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் விமல், முல்லை அரசி, சேத்தன், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜிஜு ஸன்னி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை அஜித் விநாயகா பிலிம்ஸ் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிக்கிறார்.
கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் , இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM