நகரங்களில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான கட்டடங்களை அரசுடமையாக்கும் வேலைத்திட்டத்தையே கோத்தபாய ராஜபக் ஷ மேற்கொண்டார். அதனையே தற்போது நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்கின்றது என தேசிய ஐக்கிய முன்ன ணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ நகரங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்களை அரசுடமையாக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்கின்றது.
நகரின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு காணி மற்றும் கட்டடங்களை கைப்பற்றும்போது அதற்குரிய நஷ்டஈடுகளை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கவேண்டும். ஆனால் அவ்வாறு நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அப்படியாயின் அரசாங்கம் நகர அபிவிருத்திக்கு சொந்தமான கட்டடங்களை மாத்திரம் புதுப்பித்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும் கோத்தபாய ராஜபக் ஷ தான் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவர்தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாகவே இவ்வாறு தெரிவிப்பதற்கு காரணமாகும். கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற தாஜூதீன் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பது யாரும் அறிந்த விடயம்.
அதேபோன்று ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் எக்னலிகொடவின் கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு கோத்தபாயவே பொறுப்பு கூறவேண்டும். அத்துடன் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முற்பட்ட பொலிஸ் அதிகாரியை அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியது கோத்தாவாகும்.
அரசாங்கம் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தி சாட்சியங்களுடன் நிரூபிக்காமல் தொடர்ந்து காலம் கடத்திவருவதன் மூலம் அரசு ராஜபக் ஷ குடும்பத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM