சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சி

17 Jun, 2025 | 03:03 PM
image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தூதரகத்தினால் இலங்கையில் ஃபேட் டி லா மியூசிக் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த இசை நிகழ்ச்சிகள் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில்  ஜூன் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள் ; 

ஜூன் 21 - கொழும்பில் உள்ள போர்ட் வியூ  ஹோட்டலில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.

ஜூன் 22 - கண்டி கிளப் என்ற இடத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் பாடகரும் எழுத்தாளருமான அனாய்ஸ் ரோஸோவின்  பாடல் வரிகளுடன் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஃபேட் டி லா மியூசிக் இசை நிகழ்ச்சி பிரான்ஸ் நாட்டில் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான இந்த இசை நிகழ்ச்சி ஜூன் 21 ஆம் திகதி உலகம் முழுவதும்  நடைபெறும் ஒரு இசை திருவிழா ஆகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16