ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, வட்ஸ்அப்பில் உத்தியோகபூர்வமாக விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரங்கள் “Updates” எனப்படும் பகுதியில் தோன்றும். பயனாளியின் வயது அவர் வசிக்கும் பகுதி பயன்படுத்தும் செயலிகள் போன்றவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் இருக்கலாம்.
150 கோடிக்கும் அதிகளவான பயனாளர்களால் வட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பார்க்கும் போதும், வணிகங்களின் ஒரு வழி சேனல்களைப் பின்தொடரும் போது இடையே விளம்பரங்கள் வரும். தனிப்பட்ட தகவல் பறிமாற்றத்தில் எந்தக் குறுக்கீடும் இருக்காது. முழுமையாக என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டே இருக்கும் என்றும் மெட்டா வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு,மெட்டா நிறுவனம் சேனல்களுக்கான கட்டண சந்தாக்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த படைப்பாளிகள் அல்லது நிறுவனங்களிலிருந்து பிரத்யேக புதுப்பிப்புகளை அணுக முடியும்.
வணிகங்கள் இப்போது வட்ஸ்அப்பிற்குள் தங்கள் சேனல்களை விளம்பரப்படுத்த முடியும். இது செயலியின் வளர்ந்து வரும் கோப்பகத்தில் தெரிவுநிலையை மேம்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM