உத்தியோகபூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டிருந்த காலத்தில் சரணடையாத முப்படையினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந் நிலையில் உத்தியோக பூர்வமாக விடுமுறை பெற்றுக்கொள்ளாத, விடுமுறை பெற்றுக்கொண்டு சென்று உரிய திகதியில் திரும்பாத மற்றும் அறிவிக்காமல் கடமையிலிருந்து விலகிக் கொண்ட நான்காயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டில் முப்படை அதிகாரிகளுக்கான பொது மன்னிப்புக் காலம் இருமுறை வழங்கப் பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 01ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இரண்டாம் பொது மன்னிப்புக் காலமும் முதலாவது பொதுமன்னிப்பு கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 12 ஆம் திகதி வரையும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் முப்படைகளின் 7 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 74 பேர் மொத்தமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
7 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 3241 இராணுவத்தினரும், 765 கடற்படையினரும் 68 விமானப்படையினரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறித்த கால எல்லை வரையில் உத்தியோகபூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத சுமார் 9000 முப்படையின் வீரர்கள் சட்டரீதியாக சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை பெற்றிருந்தனர். குறித்த இக்காலத்தினை பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து 11 அதிகாரிகள் மற்றும் 7812 இராணுவ வீரர்களும், விமானப்படையிலிருந்து 21 அதிகாரிகள் மற்றும் 312 விமானப்படை வீரர்களும், கடற்படையிலிருந்து 2 அதிகாரிகள் மற்றும் 709 கடற்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM