உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு நீதிவழங்குவது தொடர்பில் அரசாங்கம் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மிகமெதுவானவையாக காணப்படுவதாக தெரிவித்துள்ள கத்தோலிக்க திருச்சபை உன்னிப்பாக கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு பேராயரின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
புதிய விசாரணைகள் உட்பட தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என தெரிவித்துள்ள அவர் கடந்த ஆறுவருடங்களாக எதுவும் இடம்பெறவில்லை,விசாரணைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒட்டுமொத்த செயற்பாடுகள் மிகவும்மந்தகதியில் இடம்பெறுகின்றன , மெதுவாக இடம்பெறுகின்றன என்பதால் எதுவும் இடம்பெறவில்லை என்பது அர்த்தமில்;லை எங்கு தவறுஇடம்பெற்றுள்ளது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பங்களிப்பு குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை,பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சட்டநடவடிக்கைகளை வழிநடத்த தனியான ஒரு வழக்குரைஞர் அலுவலகத்தை உருவாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சட்டமாஅதிபர் திணைக்களம் வழங்கிய ஆதரவு திருப்திகரமானதாகயில்லை,இதன் காரணமாகவே நாங்கள் தனியான ஒரு வழக்குரைஞர் அலுவலகத்தை கோருகின்றோம் அந்த அலுவலகம் தொடர்புடைய விசாரணைகளுக்கு உதவுவதோடு, பயங்கரவாத தாக்குதல்களை ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதோடு, சில நபர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதும் அடங்கும்.,என கொழும்பு பேராயரின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM