bestweb

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி : நிதிச் சேவைகள் துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

Published By: Digital Desk 2

17 Jun, 2025 | 11:25 AM
image

JXG (ஜனசக்தி குழுமம்) துணை நிறுவனமான ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2025 மே மாதம் 28 ஆம் திகதி முதல் தனது மூலோபாய வர்த்தக நாமத்தை ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி என மாற்றம் செய்துள்ளது.

சந்தை அடையாளத்தை வலிமைப்படுத்துவது மற்றும் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தச் செய்யும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது.

உறுதியான செயற்பாடுகளைக் கொண்டுள்ள JXG (ஜனசக்தி குழுமம்) இன் அங்கமாக அமைந்திருக்கும் நிலையில், மேலும் பாரிய, சிறந்த மற்றும் வலிமையான நிலைக்கு உயர உறுதிபூண்டுள்ளது. 

இந்த மூலோபாய புத்தாக்கம், ஒரியன்ட் பைனான்ஸ் கொண்டிருந்த 43 வருட கால வாடிக்கையாளர் சேவை அனுபவத்துடன், மேம்படுத்தப்பட்ட ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் ஜனசக்தி வர்த்தக நாமத்தின் சந்தைப் பிரசன்னம் ஆகியவற்றை ஒன்றிணைத்து வழங்குகிறது.

வர்த்தக நாம மாற்றத்தினூடாக, JXG (ஜனசக்தி குழுமம்) உடன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுடன், முதலீடுகள், காப்புறுதி மற்றும் நிதித் துறைகள் போன்றவற்றில் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனம் எனும் நிலையை மீள உறுதி செய்துள்ளது.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியினால் தொடர்ந்து பரந்த நிதிச் சேவைகள் வழங்கப்படும். அதில் வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள் (இஸ்லாமிய நிதியியல்) மற்றும் கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாக திகழ்வதுடன், லங்கா ரேட்டிங் ஏஜென்ஸி (LRA) இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்