(எம்.ஆர்.எம்.வசீம்)
மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம். எதிர்வரும் நாட்களில் நிலைமையை கருத்திற்கொண்டு அதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அதேநேரம் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருக்கும் இலங்கையர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அங்குள்ள எமது தூதரங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் பிரேமசந்திர தெரிவித்தார்.
வெளிவிவகார பிரதி அமைச்சில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை, இஸ்ரேலில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது அங்கு தொழில் செய்துவருகின்றனர். அதேபோன்று ஈரானில் 20பேர் வரை இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வாறு இருந்தாலும் கடந்த தினங்களாக இந்த இரண்டு நாடுகளுக்கிடையுலுமான மோதல் தீவிரமடைந்துள்ளதால், அந்த வலயத்தில் விமான சேவைகள் இரதுச்செய்து, அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இது தொடர்பாக தலையீடுகளை மேற்கொண்டு ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக தெஹ்ரான் மற்றும் டெல் அவியில் இருக்கும் எமது தூதரகங்களுடன் நாங்கள் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்கு இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து வருகிறோம்.
அதேபோன்று அண்மை நாடுகளான டோஹா, அபுதாபி, கைராே ஆகிய நாடுகளில் இருக்கும் எமது தூதரகங்களினாலும் எமக்கு ஒத்துழைப்பு கிடைத்துவருகிறது. எமது நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவர்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். அதற்கு தேவையான ஒத்துழைப்பை தூதரங்கள் ஊடாக எங்களுக்கு கிடைத்து வருகிறது. என்றாலும் இஸ்ரேலில் தொழில் செய்துவரும் இலங்கையர்கள் இரண்டு பேருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது அது தொடர்பில் நாங்கள் உடடியாக செயற்பட்டு. சுகாதார பணியத்துடன் தொடர்புகொண்டு தேவைையாக சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
மேலும் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால்,அபுதாபியில் இருந்து இத்திஹாத், அமிரேட்ஸ் விமானங்கள் மூலம் டெல் அவி நோக்கி பணிக்க இருந்த பயணிகள் சிலருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்துகாெடுத்து தங்கவைத்திருக்கிறோம். அதேபோன்று படுபாயில் இருந்து இலங்கைக்கு வர இருந்த பயணிகள் பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு திரும்பியிருந்தார்கள். டுபாயில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிவருவார்களா அல்லது டெல் அவிக்கு செல்வார்களா என இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
அதேபோன்று மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம். எதிர்வரும் நாட்களில் நிலைமையை கருத்திற்கொண்டு அதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அதேநேரம் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருக்கும் இலங்கையர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அங்குள்ள எமது தூதரங்களுடன் தொடர்புகொள்ள முடியும். அதுதொடர்பில் அவர்களுக்கு ஏதாவது தடங்கள் ஏற்பட்டால் அவர்கள் நேரடியாக எங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM