நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை திங்கட்கிழமை (16) கொட்டைகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை உறுப்பினர்களுடன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM