bestweb

உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கம் - சஜித் பிரேமதாச

16 Jun, 2025 | 06:29 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாத சந்தர்ப்பத்தில் தலைவர் அல்லது மேயரை எவ்வாறு தெரிவுசெய்வது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு அந்த வழிகாட்டுதல்களுக்கு அப்பால் ஜனநாயக விரோதமாகவே இடம்பெற்றதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். 

திங்கட்கிழமை (16) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தலைவர் மற்றும் உப தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025இல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்தப் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சியும் பல சபைகளில் அதிகாரத்தைப் பெற்றன. இதை அவதானித்த, தற்போதைய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாற்றி செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின் பக்கம் 7இல் இரகசிய வாக்கெடுப்பு அல்லது திறந்த வாக்கெடுப்பு நடத்துவது குறித்து கருத்துகளை கோருவது எவ்வாறு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்து எவ்வாறு கேட்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இது இவ்வாறு இருக்க ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சியும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுவதன் ஊடாக சபைகளில் அதிகாரங்களை கைப்பற்றியதன் காரணமாக, தன்னிச்சையாக இந்த வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான அதிகாரிகளும் உள்ளூராட்சி ஆணையர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வழிகாட்டுதல்களை உரிய வகையில் செயல்படுத்திய உள்ளூராட்சி ஆணையர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். கொழும்பு மாநகர சபையின் 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு திறந்த வாக்கெடுப்பைக் கோரும்போது, அந்தக் கோரிக்கை எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களை மாற்றி தமக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதற்கும், திட்டத்தை செயல்படுத்துவதற்கும் செல்வாக்கு செலுத்திய தரப்பினர் யார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இது குறித்து வினவப்பட்ட போது கூட, இந்த வழிகாட்டுதல்களைப் பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறி கொழும்பு மாநகர சபை உட்பட ஏராளமான உள்ளூராட்சி நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும். இந்த வழிகாட்டுதல்களிலிருந்து விலகி நடப்பதற்கு மேல் மட்டத்தில் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்ததா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் இன்று பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இது ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையாகும். ஒரு  பிரதேசத்தில் வெளிப்படையான வாக்கெடுப்பும், மற்றொரு பிரதேசத்தில் இரகசிய வாக்கெடுப்பும் நடத்துவதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக எடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47