bestweb

பித்ரு தோஷம் விலகுவதற்கான எளிய பரிகாரம்

16 Jun, 2025 | 06:31 PM
image

எம்முடைய வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்காக அவர்களுடைய ஜாதகத்தை, பெற்றோர்கள் சோதிடர்களிடம் காண்பித்து மாங்கல்ய பாக்கிய தருணம் வந்துவிட்டதா? என கேட்டறிவர். அதற்கு அவர்கள் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து உங்களுடைய மகன் அல்லது மகளின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளது. இதனால் திருமணம் தாமதமாகலாம் என சொல்வர். அதற்காக அவர்கள் சொல்லும் பரிகாரத்தையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

அந்த பரிகாரத்திற்கு பிறகு உங்களுடைய மகன் அல்லது மகளின் பித்ரு தோஷத்தின் வீரியம் சிறிது குறைந்திருக்கும். ஆனால் திருமணம் தாமதமாக கூடும். இந்த நிலையில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரம் குறித்து என்னுடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் :

இரண்டு எவர்சில்வர் சொம்பு, பசுந்தயிர், தண்ணீர், இரண்டு எவர்சில்வர் டம்ளர்.

பொதுவாக பித்ரு தோஷம் என்பது  மரணமடைந்த உங்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் முறையாக சிரார்த்தம் செய்யாதது தான் காரணம்.

எம்மில் பலர் எம்முடைய மண்ணில் இருந்து புலம் பெயர்ந்து அயல் தேசங்களில் வாழக் கூடும். அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய முன்னோர்கள் எந்த திதியில் இறந்தார்கள் என்ற விவரத்தை துல்லியமாக சேகரித்து வைத்திருக்க மாட்டார்கள். அத்துடன் அங்குள்ள சூழல் காரணமாக முறையாக சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் செய்திருக்க மாட்டார்கள்.

இதன் காரணமாக அவர்களுடைய வாரிசுகளுக்கு பித்ரு தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்நிலையில் இவர்கள் தை அமாவாசை - ஆடி அமாவாசை - மஹாளாய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளை தெரிவு செய்து திதி தர்ப்பணம் செய்யும் நபர்களுக்கு ஒரு சொம்பு பசுந்தயிரை தானமாக வழங்க வேண்டும். அதனுடன் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் 11 ரூபாய் அல்லது 501 ரூபாயை சேர்த்து தானமாக வழங்க வேண்டும்.

அதன் போது பித்ரு தோஷ கடன் தீர்ப்பிற்காக இந்த தானத்தை வழங்குகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என பணிவுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அதே தருணத்தில் பித்ரு தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது என்றால்  இரண்டு எவர்சில்வர் சொம்புகள் வாங்கிக் கொண்டு, அதில் ஒன்றில் பசுந்தயிரையும் ,ஒன்றில் நீரையும் , இரண்டு டம்ளரையும்,  அதனுடன் 501 ரூபாயையும் சேர்த்து திதி மற்றும் தர்ப்பணம் செய்யும் நபர்களுக்கு தானமாக வழங்க வேண்டும். இதனை ஒரே ஒரு முறை செய்தால் போதுமானது. உங்களுடைய மகன் மற்றும் மகளின் பித்ரு தோஷத்தின் வீரியம் குறைந்து திருமணம் கைகூடும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பித்ரு தோஷம் விலகுவதற்கான வழிபாடு..!

2025-07-08 17:35:38
news-image

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கான சூட்சமக்...

2025-07-07 16:51:34
news-image

கேட்டதை கொடுக்கும் பிரத்யேக நட்சத்திர வழிபாடு..!?

2025-07-05 17:19:05
news-image

பிரபலமடைவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-07-04 14:46:43
news-image

பணவரவிற்கான தடையை அகற்றும் சூட்சும குறிப்பு..!?

2025-07-03 16:23:18
news-image

நவகிரக தோஷம் நீக்குவதற்கான பரிகாரம்

2025-07-02 17:41:28
news-image

தொழில் விருத்தி அடைவதற்கான சூட்சும வழிபாடு

2025-07-01 18:16:08
news-image

சுறுசுறுப்பாக இருப்பதற்கான சூட்சும வழிமுறை

2025-06-30 18:40:03
news-image

2025 ஜூலை மாத ராசி பலன்கள்

2025-06-30 16:42:02
news-image

வேலை வாய்ப்பை உண்டாக்கும் சூட்சம குறிப்பு

2025-06-27 17:04:55
news-image

கடன் பிரச்சினை மறைவதற்கான சூட்சும வழிபாடு...!?

2025-06-26 17:30:51
news-image

மாங்கல்ய தோஷ நிவர்த்திக்குரிய தான பரிகாரம்..!?

2025-06-25 16:44:48