எம்மில் சிலருக்கு அடிவயிற்று வலி, சிறுநீர் வெளியேறுதலில் பிரச்சனை மற்றும் வயிற்றுப் பகுதிகள் கட்டி பாதிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும். இது தொடர்பாக வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக செல்லும்போது அவர்கள் பரிசோதனை மேற்கொண்டு ஓவேரியன் டெரடோமா எனப்படும் கட்டி உருவாகி இருப்பதாக தெரிவிப்பார்கள்.உடனே எம்மில் பலரும் அச்சமடைவர். இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
பெண்களின் கருப்பையில் உருவாகும் ஒருவகையான கிருமி உயிரணு கட்டி தான் ஒவேரியன் டெரடோமா. இது எக்டோடெர்ம், மீகோ டெர்ம் மற்றும் எண்டோடெர்ம் என மூன்று வகையினதான கிருமி உயிரணு அடுக்குகளில் இருந்து தனித்துவமான அபரிமிதமான திசு வளர்ச்சியை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தலை முடி, தசை, பற்கள், எலும்பு ,தைராய்டு திசு, கொழுப்பு என ஒவ்வொரு வகையான ஒவேரியன் டெரடோமா உள்ளதாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்தகைய கட்டிகள் பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகள் தான். இவை புற்றுநோயாக மாற்றம் பெறுவதற்கான சாத்திய கூறு ஒரு சதவீதம் தான். இருப்பினும் இதற்கு உடனடியாகவும் , முறையாகவும், முழுமையாகவும் சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் சில பெண்மணிகளுக்கு இதன் காரணமாகவும் மக பேற்றின்மை பாதிப்பு ஏற்படக்கூடும்.
வலி, அடிவயிற்று வலி, அடிவயிற்றில் இனம் கண்டறிய இயலாத வகையினதான திசு வளர்ச்சி, சிறுநீர் பாதையில் தொற்று பாதிப்பு, காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இத்தகைய தருணங்களில் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பாதிப்பின் நிலையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சைகள் மூலமாகவோ கீமோதெரபி மூலமாகவோ அல்லது பிரத்யேக ஒருங்கிணைந்த மருந்தியல் சிகிச்சை மூலமாகவோ இதற்கு முழுமையாக நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் கௌதமன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM