ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை பங்களாதேஷ் செல்கின்றார். இந்த விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் ஹமீட் மற்றும் பிரதமர் ஷெய்க் ஹஷீனா உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் விஷேட அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விவசாய துறைசார் விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான காலநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பொதுவானதாக அமைகின்ற நிலையில் விவசாயத்தில் பங்களாதேஷ் தன்னிறைவான நாடாக திகழ்கின்றது.
குறிப்பாக அரிசி உற்பத்தியில் பங்களாதேஷ் தன்னிறைவை அடைந்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களாதேஷ் விஜயத்தின் போது இருதரப்பு விவசாய துறைசார் ஒத்துழைப்புகள் முக்கிய இடம்பிடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது . இதனை ஈடு செய்ய அவசரமாக பங்களாதேஷ் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை வழங்கியிருந்தது.
எனவே அரிசி உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி பங்களாதேஷ் விஜயம் விவசாய துறைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என கருதப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பங்களா தேஷ் மத்திய விவசாய ஆய்வு நிலையத்திற்கும் விஜயம் செய்ய உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM