bestweb

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ' தி ராஜா சாப்' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

16 Jun, 2025 | 05:29 PM
image

'பாகுபலி',  ' சலார் ', ' கல்கி கிபி 2898' என தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக இரண்டு பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ' தி ராஜா சாப்' திரைப்படத்தில் பிரபாஸ் , மாளவிகா மோகனன், நிதி அகர்வால்,  ரிதி குமார் ஆகியோருடன் பொலிவுட் நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார் ஃபேண்டஸி ஹாரர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு , மலையாளம்,  கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானதாகவும்,  கிறாபிக்ஸ் தொழில்நுட்பக் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இதன் காரணமாக இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜயை முன்னிறுத்தும் 'யாதும் அறியான்...

2025-07-16 01:39:43
news-image

அறிமுக நடிகர் நாகரத்தினம் நடிக்கும் 'வள்ளி...

2025-07-16 01:35:45
news-image

நடிகர் டீஜே அருணாசலம் நடிக்கும் 'உசுரே...

2025-07-16 01:30:48
news-image

விவாகரத்து விடயங்களை உரக்க பேசும் 'தலைவன்...

2025-07-15 21:58:20
news-image

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன்...

2025-07-14 14:33:53
news-image

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய...

2025-07-14 14:27:32
news-image

பூஜையுடன் தொடங்கிய 'விஷால் 35'

2025-07-14 14:10:36
news-image

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்

2025-07-14 14:03:06
news-image

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்

2025-07-13 09:24:19
news-image

நடிகர் கஜேஷ் நடிக்கும் 'உருட்டு உருட்டு'...

2025-07-12 17:23:46
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி'...

2025-07-12 17:14:49
news-image

துருவா சர்ஜா நடிக்கும் 'கே டி...

2025-07-12 17:11:10