புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட்டார்,
அறிமுக இயக்குநர் டி. எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' ஹும்' எனும் படத்தில் கதையின் நாயகனும், நாயகியும் தங்களுடைய முகத்தை காண்பிக்காமல் நடித்திருக்கிறார்கள். ஹேமந்த் சீனிவாசன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை 'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கிருஷ்ண வேல் பேசுகையில், '' பெண்களின் பாதுகாப்பு குறித்து பெண்கள் எதைக் கண்டு அச்சப்படக்கூடாது என்பது குறித்து ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம். சாயலாகவும் இருக்கலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்திரவாதம். இந்த படம் கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன் '' என்றார்.
படத்தைப் பற்றி பாடல் ஆசிரியர் விவேகா பேசுகையில், '' இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்கள். 13 குரல்கள். 13 உடல்கள் நடித்திருக்கின்றன. 13 உணர்ச்சிகள் நடித்திருக்கின்றன. ஆனால் அவர்களது முகங்கள் மட்டும் வெளியில் தெரியாது. இதுதான் இப்படத்தின் வித்தியாசம். இந்தப் படத்தின் முகவரியே முகம் இல்லை என்பதுதான். இது ஒரு புது முயற்சி. '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM