'லாரா' திரைப்படத்தை தொடர்ந்து எம் கே ஃபிலிம் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பான 'அறுவடை' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் 'பருத்திவீரன்' சரவணன், ராஜசிம்மன் தீபா, கவிதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஆர். ஜே. ரவீன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரகு சரவணக்குமார் இசையமைக்கிறார். கிராமிய பின்னணியிலான கொமர்சல் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்- நடிகர் - அருண்பாண்டியன், பாடகர் 'கானா' உலகநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சனை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM