பட மாளிகை மற்றும் டிஜிட்டல் தளங்களில் கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்புகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கிரைம் திரில்லர் திரைப்படங்கள் வருவதும் அதிகரித்திருக்கின்றன.
அந்த வகையில் ' அன்பிற்கினியாள் 'படத்தைத் தொடர்ந்து அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த அஃகேனம் படம் தயாராகி இருக்கிறது.
மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள 'அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இயக்குநர் உதய்.கே பேசுகையில், '' அஃகேனம் - ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்து சூட்டி இருக்கிறோம். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM